1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL Auction in Chennai today

சட்டு புட்டுனு ஆரம்பிங்க... டிரெண்டாகும் #IPLAuction2021 !!

சமூக வலைத்தளம்
இதனால் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #IPLAuction2021 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஆண்டு இறுதி டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. 
 
அதன்படி ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஏலத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவற்றில் அணிகள் குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்த நிலையில் ஐபிஎல் போட்டி ஏலத்திற்கான வீரர்கள் எண்ணிக்கை 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 125 பேர் வெளிநாட்டினர், 164 பேர் இந்திய வீரர்கள். 
 
வீரர்களுக்கான ஏலம் இன்று சென்னையில் நடக்க உள்ளது. ரசிகர்கள் இந்த ஏலத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #IPLAuction2021 என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பெயரை மாற்றிய பஞ்சாப் அணி.. நெட்டிசன்ஸ் கிண்டல்!