1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (07:55 IST)

டிவிட்டரின் செயலால் கடுப்பான குஷ்பு!

நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்புவின் டிவிட்டர் கணக்கை அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது என்பதில் இருந்து நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம்.

சமூகவலைதளங்கள் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர் பொதுமக்களோடு நேரடியாக உரையாடுவதற்கான ஒரு தலமாக உள்ளன. அதில் முக்கியமானது டிவிட்டர். 140 வார்த்தைகளுக்குள் தாங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் கருத்தை அதில் பகிரலாம் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவேற்றலாம்.

இதில் பிரபலங்களின் போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் விதமாக டிவிட்டர் நிர்வாகம் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு நீல நிற டிக் அடையாளத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது பாஜக பிரபலமான குஷ்புவின் கணக்கில் இருந்து அந்த ப்ளு டிக்கை நீக்கியுள்ளதாம். இதனால் குஷ்பு அதிருப்தியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.