திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (21:41 IST)

ஐபிஎல் 2023: விஜய் சங்கர், சுப்மன் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

ஐபிஎல் தொடரின் 39ஆவது போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த சில போட்டிகளாக முதலில் பேட்டிங் செய்யும் அணியை 200க்கும் அதிகமாக எடுத்து வரும் நிலையில் 179 என்பது குறைவான ஸ்கோராக பார்க்கப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரரான ரமனுல்லா குர்பஸ்  அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்தார்.

குஜராத் அணி சார்பில் ஷாமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி  குஜராத் அணி பேட்டிங் செய்தது.

இதில்,  விஜய் சங்கர்  51  ரன்களும், சுப்மன் 49 ரன்களும், மில்லர் 32 ரன்களும் அடித்தனர். 
17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து, கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.  எனவே புள்ளிப்பட்டியலில்  முதலிடம் பிடித்துள்ளது.