1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (20:13 IST)

10 அணிகளுடன் ஐபிஎல் 2021

10 அணிகளுடன் ஐபிஎல் 2021
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக  ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2022 15 வது சீசனுக்கான மெகா ஏலத்தில்  ஒரு அணியானது 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியுமென பிசிசிஐ விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதில், 3 இந்திய வீரர்களுடன்  1 வெளிநாட்டு வீரர் அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள், 2 இந்திய வீரர்களை ஒரு தக்க வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக 2 அணிகள் இணைய உள்ளன. அதற்கான டெண்டர் கோரும் பணிகள் அடுத்த மாதம்` தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம்  அணிகள் இறுதி செய்யப்படும் அதானி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் புதிய அணிகளை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.