1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (13:38 IST)

செப்.18 முதல் அக்.10-க்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் - பிசிசிஐ!

14வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு. 

 
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்த பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்த நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்.18 முதல் அக்.10-க்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.