1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (14:30 IST)

ஆளே இல்லாத மைதானம்; கிண்டலடிக்கும் இந்திய ரசிகர்கள்

பாகிஸ்தானில் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் வெறிச்சோடி கிடப்பதை இந்திய ரசிகர்கள் சமூக வளைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
 
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாக தொடங்கப்பட்டது பாகிஸ்தான் சூப்பர் லீக். இதன் 3-வது சீசன் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் போட்டிகளை காண ரசிகர்கள் வராததால் விளையாட்டு மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
 
இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் 11-வது ஐபில் தொடர் வரும் ஏபரம் மாதம் முதல் கோலகாலமாக துவங்கவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகந்த உற்சாகத்துடன் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கை ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் மைதானத்தை பாலைவனத்துடன் ஓப்பீட்டு இந்திய ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.