திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 மார்ச் 2018 (12:04 IST)

நாளைய எதிர்காலத்தை இப்படியாய்யா கலாய்ப்பீங்க - மீம்ஸ் வீடியோ

லதிமுக என்கிற கட்சியை இதிமுக என சமீபத்தில் பெயர் மாற்றியுள்ள டி.ராஜேந்தரை கலாய்த்து உருவாக்கப்பட்ட ஒரு மீம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
தமிழக மக்களை காக்க முக்கிய முடிவை எடுத்திருப்பதாக கூறிய டி.ராஜேந்தர், தனது லதிமுக என்கிற கட்சியை இதிமுக என பெயர் மாற்றம் செய்ததோடு, அந்த பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களையும் வைத்திருந்தார். மேலும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இதிமுகவை தொடர்ந்து நடத்துவேன் எனவும் அவர் கூறினார்.
 
ஆனால், அவரின் பேட்டியை தொலைக்காட்சி சேனல்களும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை.
 
இந்நிலையில், அவரை கலாய்த்து ஒரு மீம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.