திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (13:40 IST)

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது இந்தியா

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது இந்தியா.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் வீக்கெட்டுகளை இந்திய அணியினர் சீட்டு கட்டுகளை போல சரித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 வீக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக சானா மிர் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஷ்ட் 3 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக ஸ்மிருதி மந்தானா 38 ரன்களும், ஹர்மன்பிரீட் கவுர் 34 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி சென்றது.