1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pat Cummins said that tough competition in BGT series

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

Border Gavaskar Trophy
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி(நாளை) தொடங்கவுள்ளது.

இந்தமுதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதால் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று பலவீனமாகவே உள்ளது.

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் பேட் கம்மின்ஸ் “சொந்த மண்ணில் விளையாடுவதால் எப்போதுமே அழுத்தம் இருக்கும். இந்திய அணியும் வலுவாக உள்ளது என்பதால் கடுமையான போட்டி நிலவும். தொடரை வெல்ல இதுவே சரியான தருணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!