புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (07:32 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அந்த நாட்டு அணியுடன் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், இன்று பரத் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து, இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் விளையாடும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் 11 பேர் கொண்ட வீரர்கள் விவரங்கள் இதோ:

இந்தியா: ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், படிக்கல், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ரானா, பும்ரா, சிராஜ்

ஆஸ்திரேலியா: நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் காவாஜா, லாபுசாஞ்சே, ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேர்ரி, பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹாசில்வுட்,


Edited by Siva