1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Glenn Maxwell talked about his innings

சான்ஸே இல்லாத ஒரு இன்னிங்ஸை ஆடியதில் மகிழ்ச்சி… மேக்ஸ்வெல் பேச்சு!

க்ளன் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி ஆஸி அணியை வெற்றிப்பெற வைத்தார்.

போட்டி முடிந்ததும் பேசிய மேக்ஸ்வெல் “இன்று ஃபீல்டிங் செய்யும் போது வெப்பம் அதிகமாக இருந்தது, வெப்பத்தினால் அதிகம் உடற்பயிற்சி செய்யவில்லை. பாசிட்டிவ்வான எண்ணத்தில் இருந்தேன்.  அதே போல எனது வழக்கமான ஷாட்களை விளையாட விரும்பினேன். ஆப்கன் பவுலர்கள் அழகாக பந்து வீசினர். எங்கள் அணி எப்போதும் நம்பிக்கையானது. இந்த போட்டியின் மூலம் மேலும் அந்த நம்பிக்கை அதிகமாகியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
”நான் பார்த்த மிகச்சிறந்த ODI இன்னிங்ஸ்”… மேக்ஸ்வெல்லை புகழ்ந்த சச்சின்!