தொடர்புடைய செய்திகள்
- தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!
- இறுதி போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான்: பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி..!
- காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா
- முதல் முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்!
- 41 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்... ஷாஹீன் அப்ரிடி சொன்னது என்ன?
இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்தியா வெற்றி…!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து ஆடிய இலங்கை அணியும் இந்திய அணிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பேட் செய்தது. அந்த அணியின் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவருக்குத் துணையாக குஷால் பெராரா 58 ரன்கள் சேர்த்தார். ஆனால் பரபரப்பான கடைசி ஓவரில் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில் அதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்கள் மட்டும் எடுத்து 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் அடித்த பதும் நிசாங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த கட்டுரையில்