1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (10:33 IST)

சொந்த மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் தொடர் வெற்றி! – இந்தியா புதிய சாதனை!

நியூஸிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் 150 ரன்கள் அடித்து விளாசிய நிலையில் இந்தியா 325 ரன்கள் குவித்த நிலையில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதை தொடர்ந்து நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் ஒரு அரைசதம் அடித்தார். சுப்மன் கில் மற்றும் புஜாரா அரைசதம் இலக்கை நெருங்கியபோதும் 47 ரன்களில் அவுட் ஆனார்கள். இந்தியாவின் ஸ்கோர் 276 ஆக இருந்த நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் தொடர்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா.