1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India won all the T20s when Rohith Sharma played

ரோஹித் இருந்தா வெற்றி… இல்லன்னா தோல்வி – 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலை இதுதான்!

ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்தும் இந்திய அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக இந்திய 200 ரன்களுக்கு மேல் அடித்து தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் வென்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதுவரை இந்திய அணி 17 டி 20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டில் விளையாடியுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்த 11 போட்டிகளில் வெற்றியும், அவர் விளையாடாத 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.