புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூன் 2022 (09:26 IST)

86 % இந்தியர்கள் வேலையை ராஜினாமா செய்ய வாய்ப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் மிகப்பெரிய அளவில் வேலை ராஜினாமாக்கள் இருக்கும் என இங்கிலாந்து நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேலைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் நடத்திய ஆய்வின் படி, 86% பணியாளர்கள் அடுத்த ஆறு மாதங்களில் தங்கள் வேலைகளை  ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் பெரிய ராஜினாமா தடையின்றி தொடரும். இந்தியாவில் சுமார் 61% பேர் இப்போது வாங்கும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தை ஏற்க கூட தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. தங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக பதவி உயர்வைத் தவிர்க்கத் தயாராக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்நிறுவனத்தின் ஆய்வுகளின் படி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த வேலை ராஜினாமா நகர்வுகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளது.