நியுசிலாந்து எதிரான ஒரு நாள் போட்டி - இந்தியா பேட்டிங்


Murugan| Last Modified ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (13:33 IST)
இந்தியா - நியுசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

 

 
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தை விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.
 
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உற்சாகமாக வலம் வருகிறது. எனவே, நியுசிலாந்திற்கு எதிரான இந்த ஆட்டத்திலும், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக் காரர்களாக  தவான் மற்றும் ரோகித்சர்மா ஆகியோர் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :