வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (10:42 IST)

துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..! – தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

India Vs England
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் வெல்லும் முனையில் இந்தியா உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சுற்றுபயண ஆட்டங்கள் இங்கிலாந்தி நடந்து வருகிறது. முன்னதாக நடந்த டி20 தொடரை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகள் நடந்து வருகின்றன.

அதை தொடர்ந்து தற்போது நடந்து வரும் ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறித்து சுருட்டியது இந்திய அணி

இங்கிலாந்து அணி வீரர்களின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாஸ்பிரிட் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பாக உள்ளது. அதேசமயம் இந்த ஆட்டத்தில் போன ஆட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து வெற்றி பெற வேண்டும் என இங்கிலாந்து அணியும் தீவிரமாக் உள்ளது. இதனால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.