1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2015 (18:28 IST)

இந்தியா தென் ஆப்பிரிக்கா டெல்லி டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

டெல்லியில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்தியா அணி சில சிறந்த சாதனைகளும், தென் ஆப்பிரிக்கா அணி சில மோசமான சாதனைகளும் படைத்துள்ளன.


 
 
* மோசமான பார்ட்னர்ஷிப்
 
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அம்லா மற்றும் டிவில்லியர்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியதில் மோசமான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
 
1. அம்லா, டிவில்லியர்ஸ் 27 ரன்கள் ரன்ரேட் 0.64 எதிரணி இந்தியா
2. டிவில்லியர்ஸ், டு பிளஸ்ஸிஸ் 37 ரன்கள் ரன்ரேட் 0.99 எதிரணி இந்தியா
3. அம்லா பவ்மா 44 ரன்கள், ரன்ரேட் 1.13 எதிரணி இந்தியா
 
முதல் மூன்று மோசமான பார்ட்னர்ஷிப்பில் இடம்பிடித்திருப்பது தென் ஆப்பிரிக்க அணி ஆகும். அவை மூன்றும் இந்தியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
 
* மோசமான ஸ்ட்ரைக்ரேட்
 
இந்த ஆட்டத்தின் மூலம் டெஸ்டில் குறைந்த ஸ்ட்ரைக்ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் அம்லா மற்றும் டிவில்லியர்ஸ் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
 
1. அம்லா தென் ஆப்பிரிக்கா 25 ரன்கள், 10.24 ஸ்ட்ரைக்ரேட்
 
2. ரஸ்சல் இகிலாந்து 29 ரன்கள், 12.34 ஸ்ட்ரைக்ரேட்
 
3. டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா 43 ரன்கள், 12.34 ஸ்ட்ரைக்ரேட்
 
* 2002 இல் இருந்து டெஸ்ட் அரங்கில் முதல் 50 ஓவர்களில் குறைந்த ரன் குவித்த அணி என்ற சாதனையை புரிந்துள்ளது தென் ஆப்பிரிக்கா. முதல் 50 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து குறைந்த ரன் சேகரிப்பில் முதல் இடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி, அந்த அணி இரண்டாம் இடத்தையும் தன் வசமே வைத்துள்ளது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக முதல் 50 ஓவர்களுக்கு 68 ரன்கள் 2005 இல் எடுத்தது.
 
* இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்காக நிர்ணயித்த 481 ரன்கள் தான் அந்த அணிக்கு எதிராக இந்திய நிர்ணயித்த சிறந்த இலக்காகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 5 வது சிறந்த இலக்கு நிர்ணயம் இது ஆகும்.
 
* இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 5 வது வீரராக இடம் பிடித்தார். ஹசாரே, கவாஸ்கர், டிராவிட், கோலி இதற்கு முன் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த வீரர்கள்.
 
* சிறந்த எக்கனாமி ரேட் (ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட சராசரி ரன்)
 
1. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் நட்கர்னி 32 ஓவர்கள் வீசி 5 ரன் கொடுத்து 0.15 எக்கனாமி பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார்.
 
2. இந்த ஆட்டத்தில் ரவீந்த்ர ஜடேஜா 46 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 0.56 எக்கனாமி பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
* டெஸ்ட் அரங்கில் வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த எக்கனாமி ரேட் (90 பந்துகள்)
 
உமேஷ் யாதவ் 21 ஓவர்கள் வீசி 9 ரன் கொடுத்து 0.42 எக்கனாமி ரேட் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார். முதல் பத்து இடத்தில் இருக்கும் இந்தியர் இவர் தான்.