INDvsWI: குறைந்த இலக்கைக் கூட சேஸ் செய்யாமல் கோட்டைவிட்ட இந்திய அணி..!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. அடுத்து டி 20 தொடர் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்திப் சிங் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதன்பின்னர் எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதன் பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.