1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (16:45 IST)

வங்கதேசத்தை விட மோசமான ரன் ரேட்: பின்தங்கும் இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது.
 
இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளில் சில சமயங்களில் குறைந்த இலக்கை கூட அடைய முடியாமல் தோல்வி அடைந்தது. இதில் வெற்றி இலக்கை நோக்கிய 8 விரட்டல்களில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.
 
இந்திய அணியின் 4வது இன்னிங்ஸில் இரு விக்கெட்டுகான ரன் ரேட் 18.68 ஆக உள்ளது. வங்கதேச அணியே 4வது இன்னிங்ஸில் இரு விக்கெட்டுகான ரன் ரேட் 19.42 ஆக கொண்டுள்ளது. 
 
இந்த ரன் ரேட் வரிசையில் இந்திய அணி கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி 30.42, 30.35 என்ற சராசரியுடன் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா 21.00, இங்கிலாந்து 21.80, பாகிஸ்தான் 23.60, ஆஸ்திரேலியா 23.75, ஜிம்பாப்வே 24.50. நியூஸிலாந்து 29.04 ரன் ரேட் விகிதத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.