வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (15:43 IST)

1 லிட்டர் பெட்ரோல் ரூ.100: செப்டம்பருக்கு பிறகு இருக்கு ஆட்டம்...

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.    
 
கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இராக், சவுதி அரேபியாவை அடுத்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து பெறப்படுகிறது.   
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது. 
 
இந்நிலையில், இந்த மாதத்தில் ஈரான் மீது அடுத்தக் கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க இருக்கிறது. இந்த பொருளாதார தடை அமெரிக்காவின் நாணய கொள்கை, எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை மூலம் இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
அமெரிக்கா, நவம்பர் மாதம் முதல் ஈரானின் எண்ணெய் விநியோகத்தின் மீது தடையை விதிக்க உள்ளது. இதன் விளைவாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கவலையின்றி உயர்த்தும். 
 
ஏற்கனவே ரூ.80-க்கு விற்கப்பட்டும் பெட்ரோல், இந்த தடைகளுக்கு பிறகு ரூ.100 என விற்கப்பட்டாலும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை என வர்த்தக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.