டாஸ் வென்றது இந்தியா: முதலில் பந்து வீச முடிவு!

டாஸ் வென்றது இந்தியா: முதலில் பந்து வீச முடிவு!


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (14:43 IST)
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.

 
 
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்றும், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா வங்கதேசத்தை வெறும் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
 
இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தானை இறுதிப்போடியில் இன்று சந்திக்கிறது. பாகிஸ்தான் லீக் போட்டியில் இந்தியாவுடன் தோற்றாலும் அந்த அணி மற்ற அணிகளுடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :