தென் ஆப்பிரிக்க வீரர் டோனி டிசோர்ஸி சதம்.. 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி..!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 62 ரன்கள் அடித்தார். அதேபோல் கேப்டன் ராகுல் 56 ரன்கள் எடுத்தார்
இதனை அடுத்து இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய நிலையில் 42.3 ஓவர்களை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.
டோனி டிசோர்ஸி அபாரமாக விளையாடி 119 ரன்கள் எடுத்தார் என்பதும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva