1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. ICC T20 and ODI Rankings 2022

தோல்வி அறியாத கேப்டன் ரோஹித் சர்மா! – ஐசிசி 20 ஓவர் தரவரிசையில் இந்தியா!

india
ஐசிசி சர்வதேச டி 20 போட்டிகளின் ஆண்டு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி நான்காவது இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.
அடுத்த கட்டுரையில்
தோனி எங்கு இருக்கின்றாரோ, அங்கு அவர் தான் கேப்டன்: டூபிளஸ்சிஸ்