1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. ICC Rank list india had 2nd place

ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசை பட்டியல்; இரண்டாம் இடத்தை தக்க வைத்த இந்தியா!

Cricket
இந்த ஆண்டு முடிவுபெறும் நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு ஐசிசி உலக சாம்பியன் டெஸ்ட் போட்டிக்கு இந்தியா நேரடியாக செல்ல உள்ளது.

வழக்கம்போல இந்தியாவிற்கு கிரிக்கெட்டில் பெரும் மல்லுக்கட்டலை ஏற்படுத்தி வரும் ஆஸ்திரேலியா முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலமாக நியூஸிலாந்து அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்துக்கு அடுத்ததாக இங்கிலாந்து அணி 4வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியா சென்ற ரோஹித் சர்மாவை வரவேற்ற இந்திய அணியினர்: வைரல் வீடியோ