செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (17:13 IST)

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெயர்… பெருமை மிக்க பதக்கம் – சாதித்த ரஹானே!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது முறையாக அஜிங்க்யா ரஹானே பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய பழங்குடி வீரர்களைக் கொண்ட அணி 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்றது. அந்த அணிக்கு பழங்குடி வீரரான ஜானி முல்லாக் தலைமை தாங்கினார். இதையடுத்து அவரின் 150 ஆவது நினைவுதினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதையடுத்து அவரைக் கௌரவிக்கும் வகையில் இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு ஆஸ்திரேலிய பழங்குடி அணியின் புகைப்படம் பொறித்த பதக்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரஹானேவுக்கு சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வரலாற்று புகழ் மிக்க மெல்போர்ன் ஸ்டேடியத்தில் சதம் அடிப்பவர் அல்லது ஐந்து விக்கெட்களை வீழ்த்துபவர்களின் பெயர் பொறிக்கப்படும். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு சதமடித்து பெயர் பெற்ற ரஹானே இப்போது இரண்டாவது முறையாக அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.