வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2016 (18:04 IST)

’தோனியிடம் தான் இந்த வித்தையை கற்றுக்கொண்டேன்’ - விராட் கோலி

நான் தோனியிடம் கற்றுக் கொண்ட நிறைய விஷயங்களில், தைரியமான முடிவுகளை எடுப்பதும் ஒன்று என்று இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோலி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள அவர், “சில சமயங்களில் முடிவுகளை எடுப்பது கடினமான விஷயம். அதற்கு நிறைய தைரியம் வேண்டும். நான் தோனியிடம் கற்றுக் கொண்ட நிறைய விஷயங்களில், தைரியமான முடிவுகளை எடுப்பதும் ஒன்று. அந்த முடிவுகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.
 
ஆனால் ஒரு முடிவு எடுத்தால், அதில் நீங்களே உறுதியாக இருந்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் கேப்டனாக அணியை வழிநடத்துவதின் சாரம் அடங்கி இருக்கிறது.
 
டெஸ்ட் அணிக்கு தலைவராக இருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். ஏதோ ஒருவகையில் என்னை பெறுமையடையச் செய்கிறது.
 
உலகின் தலைசிறந்த அணியாகத் திகழவே நாங்கள் விரும்புகிறோம். இதில் எங்களில் ஒருவருக்குக் கூட சந்தேகம் எதுவும் இல்லை. ஒரு கேப்டனாக பொறுப்பேற்க தொடங்கிய உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என சிந்திக்க முடியாது. ஆனால், அனைத்து வடிவ போட்டியிலும், மேல்நிலைக்குச் செல்ல தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.