வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (16:11 IST)

பலரது உயிரைக் காப்பாற்ற பெட்ரோல் பங்கில் தீப்பிடித்த லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனர்

மத்திய பிரதேசத்தில் பலரது உயிரைக் காப்பாற்ற பெட்ரோல் பங்கில் தீப்பிடித்த லாரியை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் லாரியின் ஓட்டுனரே ஓட்டிச் சென்றதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் நார்சிங்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாரா விதமாய் லாரியில்  திடீரென தீப்பிடித்தது. பெட்ரோல் பங்கில் பூமிக்கடியில் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு தீ பரவுவதற்கு முன் டிரைவர் அந்த இடத்திலிருந்து லாரியை வெளியே ஓட்டிச்சென்றார்.
 
தீப்பிடித்த லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர், அதனை மறைவிடத்தில் நிறுத்தி, தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார். டிரைவருக்கு தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரைவரின் சாதூரியத்தால் பெரும் விபத்து தடுக்கப்பட்டு பலரது உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த டிரைவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.