வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2015 (12:54 IST)

கோலியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் விராட் கோலியின் சாதனையை, தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா முறியடித்துள்ளார்.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை [25-10-15] அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

சாதனை முறியடிப்பு:
 
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 13 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் [5 பவுண்டரிகள்] குவித்து நிலையில் வெளியேறினார். ஆனால், மொஹித் சர்மாவின் பந்தில் பவுண்டரி அடித்தபோது 15 ரன்களை தாண்டினார். அப்போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
 
ஹசிம் அம்லா வெறும் 123 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்தியாவின் விராட் கோலி இந்த சாதனையை எட்ட 136 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.
 
இதற்கு முன்னதாக அதிவேக 2000, 3000, 4000, 5000 ரன்களை குவித்தவர் என்ற பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மோசமான சாதனை:
 
இந்த தொடரில் ஹசிம் அம்லா 5 போட்டிகளில் விளையாடி வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகப்பட்சம் 37. சராசரி 16.5 ஆகும். 4 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கைகள் கொண்ட தொடரில் ஹசிம் அம்லா இவ்வளவு குறைந்த ரன்கள் எடுப்பது இதுவே முதன் முறையாகும்.