வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (07:40 IST)

ஏன் இப்படி வன்மத்தக் கக்குறாங்க… ஹர்திக் பாண்ட்யாவை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த ரசிகர்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அன்று முதல் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்கி இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி இரண்டையுமே தோற்றுள்ளது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இன்னும் ஒரு படி மேலே போய் சில ரசிகர்கள் பாண்ட்யாவை அவமதிக்கும் விதமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அன்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்ட்யா பேசும்போது, தொலைக்காட்சியில் அதைப் பார்க்கும் சில ரசிகர்கள் அவரை செருப்பால் அடித்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் அவர் மேல் ஏன் இவ்வளவு வன்மம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.