செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (07:57 IST)

மைதானத்தில் நடந்ததை ரசித்தேன்… இளம் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள்- தோல்விக்குப் பின் கூலாக பேசிய ஹர்திக்!

ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில்நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை போராடி துரத்தினாலும் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் பேசிய மும்பை அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இந்த இலக்கு நாங்கள் சிறப்பாக பந்து வீசியதாகக் கூறினாலும், அவர்களின் சிறப்பாக பேட்டிங்கைக் காட்டுகிறது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் ஆடுகளம் எப்படி இருந்திருக்கும் என புரிந்துகொள்ளுங்கள்.

சில இடங்களில் நாங்கள் வித்தியாசமாக செயல்பட்டிருக்கலாம். ஆனால் எங்கள் வீரர்கள் இளம் வீரர்கள். அவர்கள் கற்றுக் கொள்வார்கள். மைதானத்தில் இன்று என்ன நடந்ததோ அதை நான் ரசித்தேன். எங்கள் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள்.” எனக் கூறியுள்ளார்.