திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:20 IST)

ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் ஹர்பஜன்… முதல்ல நீங்க ஒழுங்கா என வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான வினி ராமனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவருக்கு இந்திய ரசிகர்களிடம் இருந்து அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகள் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரின் பதிவில் “இதையெல்லாம் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் பிறந்து வளர்ந்த உங்கள் கணவர் விளையாடும் ஒரு நாட்டு அணிக்கு ஆதரவு தந்து கொண்டே நீங்கள் ஒரு இந்தியராக இருக்கலாம். உங்கள் ஆவேசத்தை எல்லாம் முக்கியமான உலக நடப்புகளின் மேல் செலுத்துங்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து வினி ராமனுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் “ஆஸ்திரேலிய அணி வீரர்களின் குடும்பத்தினரை கிண்டல் செய்வது மோசமானது. நாம் சிறப்பாக விளையாடினாலும் , இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடியதால் நாம் தோற்றோம்.  வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் ஏன் கிண்டல் செய்யவேண்டும்? இது போன்ற விஷயங்களை நிறுத்தும்படி ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இறுதிப் போட்டியின் போது இந்தி வர்ணனையின் போது பேசிய ஹர்பஜன் “அனுஷ்கா மற்றும் அதியா ஷெட்டி இருவரும் கிரிக்கெட் பற்றி பேசுகிறார்களா அல்லது சினிமா பற்றி பேசுகிறார்களா என தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்காது என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பல நெட்டிசன்கள் ஹர்பஜனின் இந்த கருத்து பெண் வெறுப்புக் கருத்து என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இப்போது ஹர்பஜன் சிங்கை கேள்வி எழுப்பும் விதமாக “நீங்கள் மட்டும் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளைப் பற்றி கிண்டல் செய்யும் விதமாக பேசுவது சரியா” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.