இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார் ஹர்பஜன்; வங்கதேச பயணத்திற்கான அணி அறிவிப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 20 மே 2015 (15:36 IST)
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூத்த வீரர் ஹர்பஜன் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
 
இந்திய அணி வரும் ஜுன் மாதம் 10ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி 10ஆம் தேதி தொடங்குகிறது.
 
 
டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதால் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதற்காக விருத்திமான் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
அதே போல், மூத்த வீரர்களான யுவராஜ் சிங், ஜாஹிர் கான், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு மட்டும் டெஸ்ட் அணியில் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
டெஸ்ட் அணி விவரம் வருமாறு: விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், ரோகித் சர்மா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்பஜன் சிங், கே.எல். ராகுல், சதீஸ்வர் புஜாரா, அஜிங்கே ரகானே, கரன் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா
 
ஒரு நாள் போட்டிக்கான அணி விவரம் வருமாறு: தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவிச்சந்திரன் அஷ்வின், ரோகித் சர்மா, அஜிங்கே ரகானே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி


இதில் மேலும் படிக்கவும் :