வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:29 IST)

யாஷ் தாக்கூர் அபார பவுலிங்… குஜராத் டைட்டன்ஸை எளிதாக வென்ற லக்னோ!

நேற்று நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.அந்த அணியின் யாஷ் தாக்கூர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.