திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (07:18 IST)

ஒரு கேட்ச்சால் போட்டியின் விதியே மாறியது… ஆப்கான் கேப்டன் ஆதங்கம்!

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் கிளன் மேக்ஸ்வெல். அவர், 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து ஆஸி அணியை வெற்றி பெறவைத்தார்.

இந்த போட்டியில் அவர் தொடக்கத்தில் எளிதான கேட்ச் வாய்ப்பை ஆப்கன் அணியினர் தவறவிட்டனர். அதனால் போட்டியின் தலைவிதியே மாறியது. போட்டி முடிந்ததும் இதைக் குறிப்பிட்டு பேசிய ஆப்கன் கேப்டன் “கேட்ச்சை விட்டதுதான் எங்களின் தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.