கெய்ல் சதம் அடிக்க வேண்டும்; ஆனால் இந்தியா வெல்ல வேண்டும் - அமிதாப் பச்சன் விருப்பம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 30 மார்ச் 2016 (17:47 IST)
கிறிஸ் கெய்லை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வழங்கிய அமிதாப் பச்சன், இந்தியாவுடனான போட்டியில் கெய்ல் சதம் அடிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்தியா வெல்ல வேண்டும் விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
 
 
உலக கோப்பை டி20 தொடரில், மும்பை வான்கடே மைதானாத்தில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பை வந்துள்ளனர்.
 
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், தனது இல்லத்திற்கு வர வேண்டும் என, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததை ஏற்று அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது அமிதாப் தனது சில புத்தகங்களை கெய்லுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
 
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிறிஸ் கெய்ல், “அமிதாப் பச்சன் நிச்சயமாக பெரிய மனிதன். உங்களுடைய இல்லத்திற்கு அழைத்து உபசரித்ததற்கு நன்றிகள். வழங்கிய புத்தகங்களுக்கும்கூட நன்றிகள்.
 
இவர் இந்திய அணிக்கு எதிராக நான் 100 ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் ஆனால், இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், எனக்கு 100 ரன்கள் அடிப்பதை விட அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :