சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: போட்டுடைத்த கங்குலி

Last Updated: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (17:53 IST)
சச்சின் மற்றும் கங்குலி சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருந்து வந்தவர்கள். இவர்களது நட்பு இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடும் போது மேலும் அதிகரித்தது. 
இந்நிலையில், கங்குலி சச்சினை பற்றிய ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். கங்குலி கூறியது பின்வருமாறு... இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்காக சென்றிருந்தோம். என்னுடைய படுக்கைக்கு அருகே சச்சினின் படுக்கை இருந்தது.
 
ஒரு நாள் நள்ளிரவில் கண்விழித்துப் பார்த்தபோது சச்சினை காணவில்லை. அப்போது, சச்சின் எவ்வித சலனமும் இல்லாமல், ஹோட்டல் முன் இருக்கும் இடத்தில் நடந்துவிட்டு, என்னை பார்த்தும், பார்க்காமல் மீண்டும் வந்து படுக்கையில் படுத்துக்கொண்டார்.
 
இதேபோன்று அடுத்த நாள் நள்ளிரவில் சச்சின் நடந்து சென்றார். அப்போது எனக்கு சிறிது பயமாக இருந்தது. மறுநாள் காலை டிது குறித்து நான் சச்சினிடம் கேட்ட போது அவர் அதற்கு எனக்கு இரவில் நடக்கும் நோய் இருக்கிறது. அதனால்தான் அப்படி நடந்தேன் என்றார் என சச்சின் குறித்த ரகசியத்தை அம்பளப்படுத்தியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :