செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (13:16 IST)

டி.என்.பி.எல் கிரிக்கெட் கோவை - மதுரை அணி இன்று மோதல்

இன்றைய டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. 
மதுரை பாந்தர்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 மேட்சுகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளை வைத்துள்ளது. இதன் மூலம் மதுரை அணி பிளே ஆப் சுற்றிற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
 
கோவை கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 மேட்சுகளில் 3 வெற்றியையும் 3 தோல்வியையும் சந்தித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் கோவை அணி அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியும்.
 
இன்று இரவு 7.15க்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்  வெற்றி பெற வேண்டும் என இரு அணி வீரர்களும் தீவிரமாக பிராக்டீஸ் செய்து வருகின்றனர்.