டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு மேலும் ஒரு வெற்றி
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று காஞ்சி அணிக்கும் திருச்சி அணிக்கும் இடையிலான போட்டியில் திருச்சி அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணியை வென்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து 137 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பரத்சங்கர் 69 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்
அதேபோல் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் காரைக்குடி அணியை தூத்துகுடி அணி வென்றது. இந்த நிலையில் நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தது. நாளை முதல் அடுத்த சுற்றுகளின் போட்டிகள் ஆரம்பமாகும், இறுதி போட்டி வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும்