1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 22 மே 2024 (07:20 IST)

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட கம்பீர், இரண்டு  முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் கே கே ஆர் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சொதப்பி வந்த கே கே ஆர் அணி அவர் வருகைக்குப் பிறகு சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கம்பீரிடம் அவர் ஏன் எப்போதும் சிரிக்காமல் முகத்தை விரைப்பாக வைத்திருக்கிறார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் ‘நான் சிரிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். ரசிகர்கள் நான் சிரிப்பதைப் பார்க்க வரவில்லை. வெல்வதைப் பார்க்கவே வருகிறார்கள். நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை. கிரிக்கெட்டில் இருக்கும் நான் அதன் விதிகளுக்கு உட்பட்டு எல்லாவற்றையும் செய்து வெற்றியோடு ட்ரஸ்ஸிங் அறைக்கு செல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.