திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:21 IST)

சச்சின், கோலி, கவாஸ்கர விட இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்… கம்பீர் சொன்ன வித்தியாச பதில்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன்களான கவாஸ்கர், சச்சின் மற்றும் கோலி ஆகிய மூவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு கேள்வி கேட்டவரே வியந்து போகுமளவிற்கு மூவரின் பெயரையும் நிராகரித்து “யுவ்ராஜ் சிங்தான்” சிறந்த பேட்ஸ்மேன் எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.