1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (14:07 IST)

அத்தி பூத்தார் போல சிரித்த கம்பீர்… உடனே மீம்ஸ்களாக பறக்கவிட்ட நெட்டிசன்கள்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இப்போது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர் முழுவதும் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு, கம்பீர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது கம்பீர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார். பஞ்சாப் அணி வீரர் ஜிதேஷ் சர்மா அவுட்டான போது கம்பீர், சிரிக்க, உடனே அதை மீம் மெட்டீரியல் ஆக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.