திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (22:59 IST)

முதலில் ரூ.11 கோடி....இப்போது ரூ. 6.77 லட்சம் தந்து உதவிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி  இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.6.77 லட்சம் பணவுதவி செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை  கே.எஸ்.கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடு. இவரது தாயார் எஸ்.கே.சுமன் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

அவரது சிகிச்சைக்காக  விராட் கோலி ரூ.6.77 லட்சம் வழங்கி உள்ளார்.

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிசிசிஐக்கு வீராங்கனை ஸ்வரந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கோலி ரூ.6.77 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். சமீபத்தில் கொரொனாவால் பாதிக்க மக்களுக்கு நிதி திரட்ட ஒரு இயக்கம் தொடங்கி அதற்கு ரூ.2 கோடி நிதி அளித்தார். இந்த இயக்கத்தின் மூலம் ரூஉ. 11 கோடி தி திரட்டப்பட்டுள்ளது.