31 போட்டியில் 52 விக்கெட்: ரஷீத்கான் சாதனை!

Last Updated: திங்கள், 4 ஜூன் 2018 (14:07 IST)
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. 
 
இதில் டாஸ் வங்காளதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 வீக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 
 
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 19 ஓவர்களில் அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்து வெறும் 122 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 
 
இந்த போட்டியின் மூலம், ரஷீத்கான் டி20 போட்டியில் 50 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைந்துள்ளார். அதாவது, 31 போட்டியில் அவர் 52 விக்கெட் எடுத்து உள்ளார்.
 
இதன் மூலம் டி20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனையை இம்ரான் தாகீருடன் இணைந்து பெற்றுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :