வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:48 IST)

RCB ரசிகர்களுக்கு இதான் ஒரே ஆறுதல் இதுதான்… மைதானத்துக்கு வெளியே அனுப்பிய டு பிளஸ்சி!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராட் கோலி (61), பாப் டு ப்ளஸி (79), மேக்ஸ்வெல் (59) என ரன்களை குவித்தனர். ஆனால் அடுத்து லக்னோ அணி களமிறங்கியபோது மோசமான பவுலிங்கால் ரன்களை அதிகம் விட்டது ஆர்சிபி. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் எகிற 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. லக்னோ அணியில் பூரன் மற்றும் ஸ்டாய்னஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் RCB அணி வெற்றி பெறும் என ஆவலாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது டு பிளஸ்சி அடித்த இமாலய சிக்ஸர்தான். 115 மீட்டர் சென்ற அந்த சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்று விழுந்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸ் இதுதான்.