ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (07:36 IST)

எங்கள் வீரர்கள் அவர்களின் சிறந்ததற்கு அருகில் கூட இல்லை… இங்கிலாந்து கேப்டன் வேதனை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து 229 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 230 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களில் ஆல் அவுட் ஆனது.. ஷமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் அபாரமாக பந்து வீசினார். அதிகபட்சமாக ஷமி நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

தோல்விக்குப் பின்னர் பேசிய இங்கிலாந்து கேப்டன்  ஜோஸ் பட்லர் “நாங்கள் ஆட்டத்தின் பாதியில் 230 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஆனால் எதுவும் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை. எங்கள் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் யாரும் தங்கள் பெஸ்ட்டுக்கு அருகில் கூட வரவில்லை. இந்த தொடர் முழுவதும் நாங்கள் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் சொதப்பி வருகிறோம். இது மிகவும் வேதனையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.