1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Womens World Cup T-20 England team struggles and lose

உலகக்கோப்பை மகளிர் டி-20: இங்கிலாந்து அணி போராடி தோல்வி

வெயிட்
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில்4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணியில், வெயிட் 34 ரன்களும், டங்கிலி 28 ரன்களும், புரூன்ட் 40 ரன்களும், நைட் 31 ரன்களும் அடித்தனர்.

திரில்லிங்காக நடந்த இப்போட்டியில்,  20 ஓவர்களில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து போராடித் தோற்றது இங்கிலாந்து.

தென்னாப்பிரிக்க அணி 6 ரன் கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வென்றது.

 எனவே இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பை மகளிர் டி-20: இங்கிலாந்திற்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு!