வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:21 IST)

செம போதை ஆகாதே.. சரக்கடித்து மயங்கி விழுந்த மேக்ஸ்வெல்! – ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு!

Maxwell
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மதுபோதையில் மயங்கி விழுந்ததால் அவரை ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெலுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் ஒரு இந்திய பெண்ணைதான் திருமணமும் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் அளவுக்கு அதிகமாக மதுவை அருந்தி நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வாறு போதை தலைக்கேறி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பங்கேற்கு ஒருநாள் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Edit by Prasanth.K