தொடர்புடைய செய்திகள்
- இந்த சீசனோடு தோனிக்கு எண்ட் கார்டா? சிஎஸ்கே முக்கிய நிர்வாகி பகிர்ந்த தகவல்!
- தோனி கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்! – விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி!
- தோனி கேப்டன்சியில விளையாடுறது கனவு… இளம் வீரரின் ஆசை!
- உங்க சகாப்தத்திற்கு முடிவே கிடையாது தோனி! – ட்வெய்ன் ப்ராவோ ட்வீட்!
- 12 ஆண்டுகளில் தோனி கேப்டன்சி இல்லாத சி எஸ் கே … அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ரெய்னா கேப்டன்சியில் தோனி விளையாடிய மேட்ச் ஞாபகம் இருக்கா?
சமீபத்தில் சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார்.
மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு சி எஸ்கேவில் ஜடேஜா தலைமையில் ஒரு வீரராக தோனி களமிறங்க உள்ளார். இதற்கு முன் சி எஸ் கே வில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார். 2012 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் ஒரே ரெய்னா தலைமையில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்