1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (18:55 IST)

வழக்கத்திற்கு விரோதமான செயல்தான் எனது ஸ்டைல்: தோனி!

முன்னாள் கேப்டன் தோனி சிறந்த கேப்டன், பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்பவர். எப்பொழுதும் விக்கெட் கீப்பிங் பற்றி பெரிதாய் பேசாத இவர் சமீபத்தில் பேசியுள்ளார். 
 
தோனி கூறியதாவது, நான் வழக்கத்திற்கு விரோதமான ஸ்டைலில் செயல்படுவதே விக்கெட் கீப்பிங்கிள் எனது வெற்றியின் ரகசியம் என நினைக்கிறேன். நான் ஐபிஎல் போட்டிகளின் பயிற்சியின்போது கீப்பிங் பிராக்டிஸ் செய்யவே மாட்டேன். 9 வருட கால ஐபிஎல் அனுபவத்தில் ஒருமுறை கூட நான் கீப்பிங் பயிற்சி செய்தது இல்லை.
 
விக்கெட் கீப்பிங் என்பது மைதானத்தில் பிராக்டிஸ் செய்து வருவதில்லை. என்னை பொருத்தவரை விக்கெட் கீப்பர்களுக்கு பயிற்சியே தேவையில்லை. சிலர் மைதானத்தில் ஓவர் பில்டப் கொடுப்பர். ஆனால் அதெல்லாம் தேவையில்லை.
 
பந்துகளை தவற விடலாம், அதில் தவறு இல்லை. ஆனால் சரியான பந்து வரும்போது பிடிக்காமல் இருப்பதுதான் தவறு. ஸ்டம்பிங் வாய்ப்பு வரும்போதும் கேட்ச் வரும்போது அதை சரியாக கையாள வேண்டும். 
 
கீப்பர் எப்படிப்பட்டவர் என்பது முக்கியமில்லை. சரியான முறையில் ஸ்டம்பிங் செய்து, சரியான கேட்ச்சைப் பிடித்து, அணிக்கு சரியான திருப்பத்தைக் கொடுத்து, கேப்டனை சரியான முறையில் வழி நடத்தினால் அவர்தான் பெஸ்ட் கீப்பர் என தெரிவித்துள்ளார் தோனி. 
 
தோனி கூறுவதை வைத்து பார்த்தால் தோனி எப்போதும் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்தான். உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி மூன்றாவதாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.